கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச மன்னிப்பு கோரியுள்ளார்.
41 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இனவன்முறைகள் தொடர்பில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ராஜபக்ச இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நாட்டை இருண்ட யுகத்திற்கு இட்டுச்சென்ற கறுப்பு ஜூலை கலவரத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இருண்ட யுகம்
குறித்த சம்பவங்கள் இடம்பெற்ற போது அமைச்சராகவோ, அரசியலிலோ இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாட்டின் பொறுப்பு வாய்ந்த ஓர் பிரஜை என்ற அடிப்படையிலும், அமைச்சர் என்ற ரீதியிலும் தாம் தமிழ் மக்களிடம் இந்த சம்பவங்களுக்காக மன்னிப்புகோருவதாக விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார்.
1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற இனக்கலவரத்தினால் நாடு இருண்ட யுகம் நோக்கி நகர்ந்தது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.