வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அவரகொட்டுவ பிரதேசத்தில் ஆண் ஒருவர் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.
45 வயது மதிக்கத்தக்க 5 அடி 7 அங்குலம் உயரமுடைய நபரே நேற்று(23.03.2025) ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை
என்று வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
சடலமானது ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://tamilwin.com/article/body-of-unidentified-man-recovered-in-wattala-1742819254

