கவிமலர்கள் பைந்தமிழ்ச்சங்கம் நடாத்தும் இலங்கை (Sri Lanka) கிளையின் உலகசாதனை புத்தக
வெளியீட்டு நிகழ்வு கொழும்பில் (Colombo) இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வானது, பம்பளப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
இதன்போது இலங்கை இந்தியா (India) உட்பட நாடுகள் பூராகவும் உள்ள நூற்றுக்கும் அதிகமான
படைப்பாளிகளின் படைப்புக்கள் வெளிவரவுள்ளதுடன் உலக சாதனைக்காக புதிய வெளியீடாக 100 புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளன.
தொகுப்பு நூல்
அத்தோடு, தொகுப்பு நூல் ஒன்றும் வெளியீடு செய்து
வைக்கப்படவுள்ளதுடன் பங்குபற்றும் அனைத்து படைப்பாளிகளுக்கும் உலக சாதனைக்கான
சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் கொடுத்து கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்த நிகழ்வில், பிரதம அதிதிகளாக திட்ட அபிவிருத்தி அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganeshan) ஆகியோர் கலந்து கொள்வதோடு கௌரவ அதிதிகளாக பிரம்ம ஸ்ரீ நாகராஜ குருக்கள்
(கதிரேசன் கோவில் ) S. ராஜேந்திரன் (அறங்காவலர்) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும், சிறப்பு விருந்தினர்களாக இந்தியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் கழகத்தின் மாநில துணை அமைப்பாளர் முனைவர் எஸ் யாசின் ஷரீப், சென்னை (Chennai) தென் மாவட்ட தி.மு.க பிரதிநிதி ஈகை கா. கருணாநிதி, முனைவர் கவிஞர் வீரை மைதீன் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.