கொழும்பின் புறநகர் பகுதியான கஹதுடுவ என்ற இடத்தில் 15 வயது சிறுவனை கடத்திய
சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(17) இடம்பெற்றுள்ளது.
எனினும், குறித்த சிறுவன் கொழும்பின் ஒரு பகுதியில் வைத்து தாம் கடத்தப்பட்டதாக
கூறப்படும் வேனில் இருந்து குதித்து தப்பியுள்ளார்.
காரணம் தெரியவரவில்லை
இதனையடுத்து, பொலிஸார் குறித்த சிறுவனை தமது காவலில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த கடத்தலுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

