புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் இளைஞன் ஒருவர் தடிகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை தொடர்பில் பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட இளைஞனின் தாயாரின் தம்பி, சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபடும் நபர் மற்றும் அவரது மனைவி என தெரியவந்துள்ளது.
இளைஞன் பலி
உயிரிழந்தவர் ஆனமடுவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய திருமணமாகாத சஜீத் திவங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சட்டவிரோத கசிப்பு தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவராகும்.
சந்தையில் ஏற்பட்ட தகராறில், அவரது மாமாவால் கட்டையால் தாக்கப்பட்டதில் மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விளக்க மறியல்
கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று முன்தினம் ஆனமடுவ நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.