பண்டாரவளையில் பூச்சிக்கொல்லிகள் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு
அபிவிருத்தி அலுவலர் மற்றும் வாகன ஓட்டுநர் ஆகியோர் இலஞ்ச ஊழல்களுக்கு எதிரான
ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(03.07.2025) இடம்பெற்றுள்ளது.
தொழில் ஒன்றை பதிவு செய்வதற்காக ஒருவரிடம் இருந்து 10,000 ரூபாய் இலஞ்சம்
பெற்றபோதே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

பண்டாரவளை நீதவான் நீதிமன்றம்
கைது செய்யப்பட்ட இருவரும் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலை செய்யப்படவுள்ளனர்.

