முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவை கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்பட்ட ரவிகுமார் என்பவரை தீர்ப்பு வந்ததன் பின்னர் நான் தான் சிங்கப்பூருக்கு அழைத்து சென்றேன் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அதன் பின்னர் அவர் அங்கிருந்து பிரித்தானியா(UK) சென்றார்.
இந்தவிடயத்தில் எனக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்தன.
நான் அவரை அழைத்து சென்றிருக்கவில்லையாயின் அவர் மீது வழக்கு தொடர தயாராக இருந்தார்கள்.
டெனமார்க் சித்ரா நாடு கடத்தப்பட்ட பொழுது நான் அவரை பிணையில் எடுத்தேன்.
ஒருவரும் அவருக்காக வரவில்லை. உலகம் முழுவதும் இது தொடர்பில் பேசப்பட்டது” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு…

