முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பகுதியில் அரச – தனியார் பேருந்து ஊழியர்களிடையே மோதல்

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி சந்தியில் தனியார் பேருந்து வண்டி மற்றும் இலங்கை போக்குவரத்து பேருந்து சாரதிகள் நடத்துனர்களுக்குள்
ஏற்பட்ட கைகலப்பில் பிரயாணி ஒருவர் காயமடைந்துள்ளார். 

இந்நிலையில் குறித்த பிரயாணி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டதுடன் தனியர் பேருந்தின் நடத்துனர் மற்றும் அவரின் உதவியாளர் உட்பட இருவரை
இன்று (14) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்றில் இருந்து வவுனியாவுக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட
தனியார் பேருந்தும் அக்கரைப்பற்றில் இருந்து புத்தளத்துக்கான போக்குவரத்து
சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தும் இன்று காலை அக்கரைப்பற்றில் இருந்து ஒரே நேரத்தில் புறப்பட்டுள்ளன. 

முறுகல் நிலை 

இதன்போது பிரயாணிகளை ஏற்றும் நடவடிக்கையில் இரு பேருந்தும் முன்னுக்கு
பின் போட்டி போட்டுக் கொண்டு செலுத்தப்பட்டுள்ளன. அதன் காரணமாக, இரு பேருந்து நடத்துனர்கள். சாரதிகளுக்குள்ளே பெரும் முறுகல் ஏற்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் அரச - தனியார் பேருந்து ஊழியர்களிடையே மோதல் | Bus Contactors Conflict Batticalo

இதனையடுத்து பிரயாணிகள் காலை உணவு உண்பதற்காக 8.45 மணியளவில் வாழைச்சேனை
நாவலடி சந்தியிலுள்ள உணவகத்தில் இரு பேருந்துகளும் முன்னுக்கு பின்னர்
நிறுத்தப்பட்ட நிலையில் இரு பேருந்து நடத்துனர்கள், சாரதிகளுக்குள்ளே வாய்தர்க்கம்
முற்றி அடிபிடியில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது அதனை தடுக்க சென்ற பிரயாணி ஒருவர்
மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை
ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவத்தை அடுத்து தனியார் பேருந்து நடத்துனர் அவரது உதவியாளர் உட்பட
இருவரை கைது செய்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.