கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது சூட்கேஸில் 175 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளை மறைத்து கொண்டு வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று இரவு விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கனேடிய பெண்
கைது செய்யப்பட்ட பெண் 20 வயதுடைய கனேடிய இளங்கலை மாணவி எனவும் அவர் இலங்கை வருவது இதுவே முதல் முறை எனவும் குறிப்பிடப்படுகின்றது.