யாழ்ப்பாணம்(Jaffna) – பருத்தித்துறை, புலோலி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த ஒரு தொகை
போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த போதைப்பொருட்கள் நேற்றைய தினம்(03.07.2024) மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
இதன்போது, ஒரு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா, 290 போதை மாத்திரைகள் மற்றும் தராசு
ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளன.
எனினும், சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் பருத்தித்துறை பொலிஸார்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.