உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளார்.
இந்த தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த வாரம் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட்டது.
போலியான கருத்துக்கள்
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் போலியான கருத்துக்களை முன்வைத்ததாக கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலவும் மழையுடனான காலநிலை: மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
அத்துடன், இந்த தாக்குதல் தொடர்பான நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்துமாறு கத்தோலிக்க திருச்சபை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையை முன்னெடுக்கும் எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க நாட்டு மக்கள் அனைவரையும் ஊக்குவிப்பதாகவும் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்.
மற்றுமொரு விமான சேவை ஆரம்பம்: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |