கடந்த மார்ச் மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
அதற்கு முந்தைய மாதமான பெப்ரவரி மாதத்தில் 6.08 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பாக இருந்துள்ளது.
இதனை விட 7.1% அதிகமான டொலர் கையிருப்பு மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது.

அந்நிய செலாவணி சந்தை
இதேவேளை, இலங்கை மத்திய வங்கி 2025 மார்ச் மாதத்தில் உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் இருந்து 401.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

