தொடர் தோல்வியில் இருந்து மீண்டு எழுமா என்ற ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் லக்னோ அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று (14.04.2025) எதிர்கொள்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் தொடங்குகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (Lucknow Super Giants), சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிகள் மோதுகின்றன.
லக்னோ அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது.
சொந்த மண்ணில் குஜராத் அணியை வீழ்த்திய கையோடு லக்னோ அணி களம் காண்கிறது.
அதேநேரம், 5 முறை சாம்பியனான சென்னை அணி, நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.