முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் கை குழந்தைகளை பயன்படுத்தி ஊதுபத்தி வியாபாரம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

வவுனியா (Vavuniya) நகரில் கடைத்
தொகுதி, வீதிகளில் கைக் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை
செய்பவர்கள் தொடர்பில் உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ச்சியாக
கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஊதுபத்தி விற்கும் பெண்களின் தொல்லை நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும்,
ஊதுபத்தி விற்பது போல் பெண்களை வசியப்படுத்தி நகைகளை பறிக்க முயற்சி
செய்வதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

அத்தோடு, இவர்கள் வெளிநாட்டவர்களையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊதுபத்தி விற்பனை

இவர்கள் ஒரு குழுவாகவே வெளியிடங்களில் இருந்து வருகை தந்து கைக் குழந்தையுடன் பெண்கள் அமர்ந்து இருக்கின்றனர். அதிகமானவர்கள் கர்ப்பிணிப்
பெண்களாகவும் பாலூட்டும் தாய்மார்களாகவும் உள்ளனர். இதில் சிறுமிகளும்
உள்ளடங்குகின்றனர்.

வவுனியாவில் கை குழந்தைகளை பயன்படுத்தி ஊதுபத்தி வியாபாரம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Child Incense Business In Vavuniya

மேலும் ஊதுபத்தி விற்பனை செய்யும் போது ஊதுபத்தியினை பார்த்துவிட்டு
வாங்குவதற்கு தவறும் பட்சத்தில் பொது மக்களையும், வெளிநாட்டவர்களையும் தகாத
வார்த்தைகளால் அவதூறாக பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.

உரிய நடவடிக்கை

குறித்த விடயம் தொடர்பில் நகரசபை மற்றும் பொலிஸார், சிறுவர் பாதுகாப்பு
பிரிவு, மாவட்ட செயலகம் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த சகலருக்கும்
தெரிந்திருந்தும், தெரியப்படுத்தியிருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

வவுனியாவில் கை குழந்தைகளை பயன்படுத்தி ஊதுபத்தி வியாபாரம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Child Incense Business In Vavuniya

இவ்வாறான நடவடிக்கைகளினால் மக்கள் பல்வேறு
அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

எனவே, பொறுப்பு வாய்ந்தவர்கள் இனி வரும் காலங்களில் இந்த விடயத்தில் அக்கறை
செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்