முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நிலவின் தொலைதூர அரிதான மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பிய சீன விண்கலம்

Courtesy: Sivaa Mayuri

சீனாவின் சாங்கே 6 (Chang’e 6) விண்கலம் பூமிக்கு திரும்பியுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது குறித்த விண்கலம், நிலவின் தொலைதூரத்தில் இருந்து அரிதான மாதிரிகளை எடுத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு விண்கலம், மங்கோலியாவில் சீன நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் தரையிறங்கியுள்ளது.

நிலவின் தொலைதூர மாதிரிகள்

இந்தநிலையில் விஞ்ஞானிகள் இந்த ஆய்வு விண்கல வருகையை ஆவலுடன் வரவேற்றுள்ளனர்.

சாங்கே 6, சுமார் 2 கிலோகிராம் நிலவின் தொலைதூர மாதிரிகளை எடுத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

chinese-spacecraft-returns-earth-rare-samples-moon

இந்தநிலையில், பூமிக்கு எடுத்து வரப்படும் முதலாவது நிலவின் மாதிரிகளாக இது அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விலைமதிப்பற்ற இந்த மாதிரிகளை கொண்டு பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளமுடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக 1970இல் சோவியத் லூனா விண்கலம், நாசாவின் அப்பலோ மற்றும் ஒரு சில ரோபோ ஆய்வுகள் நிலவின் மாதிரிகளை பூமிக்கு அனுப்பியுள்ளன.

எனினும் இந்த மாதிரிகள் அனைத்தும் நிலவின் அருகில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளாகும்.

விண்கலம் 

நிலவின் அருகில் உள்ள பக்கங்களும் தூரப் பக்கங்களும் ஒரே மாதிரியானவை அல்ல.

நிலவின் அருகிலுள்ள பக்கத்தின் பெரும்பகுதி இருண்ட பகுதியாக உள்ளது.  எனினும் நிலவின் தொலைதூரத்தில் கிட்டத்தட்ட எதுவும் இல்லை, அதற்குப் பதிலாக குழிகளே அமைந்துள்ளன

இது ஏன் என்பது விடை தெரியாத கேள்வியாகவே தொடர்கிறது.

chinese-spacecraft-returns-earth-rare-samples-moon

எனவே சீனாவின் சாங்கே 6 மாதிரிகள் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க உதவும் என்று நம்பப்படுகிறது

இந்த விண்கலம் கடந்த மே 3 அன்று ஹைனன் தீவில் இருந்து ஆய்வுக்காக ஏவப்பட்டது.

இதனையடுத்து ஆய்வுகளின் பின்னர் குறித்த விணகலம், ஜூன் 21 அன்று பூமிக்கு திரும்பும் பயணத்தை ஆரம்பித்தது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.