கிளப் வசந்த கொலையின் பிரதான சந்தேகநபரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இந்த கொலையின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் துப்பாக்கிச்சூடு நடத்திய அஜித் ரோஹன கடந்த வெள்ளிக்கிழமை தெஹிவளை – கௌடான பிரதேசத்தில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கொலை வழக்கு
இவர் இராணுவத்தின் 14 வது சிங்கப் படைப்பிரிவில் பணிபுரிந்தவர் என்றும், அவர் ஏற்கனவே கொலை வழக்கொன்றில் முன்னதாக கைது செய்யப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.