அமெரிக்காவின் கொலராடோவின் போல்டர் பகுதியில், நேற்று நடந்த கொடூரமான தாக்குதலை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ளவே முடியாது என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கொலராடோவில் இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பாலஸ்தீனத்தை விடுவிப்போம் என்று கூச்சலிட்ட ஒருவர் மொலோடோவ் காக்டெய்ல்களை வீசியதில் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த தாக்குதல் தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், “கொலராடோவின் போல்டர் பகுதியில், நேற்று நடந்த கொடூரமான தாக்குதலை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ளவே முடியாது.
பைடனின் திறந்த எல்லை கொள்கை
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் அபத்தமான திறந்த எல்லைக் கொள்கை மூலமே குறித்த தாக்குதல்தாரி அமெரிக்காவிற்குள் வந்துள்ளார்.

இது நம் நாட்டை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. குறித்த நபர் ட்ரம்ப்’ கொள்கையின் கீழ் வெளியேற வேண்டும். பயங்கரவாதச் செயல்கள், சட்டத்தின் முழு அளவிற்கும் தண்டிக்கப்படும்.
நமது எல்லைகளை நாம் ஏன் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், சட்டவிரோத, அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதிகளை நமது தாயகத்திலிருந்து நாடு கடத்த வேண்டும் என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு.
8 people have been injured after a man shouting “free Palestine”: The attack unfolded during a weekly scheduled demonstration put on by Run for Their Lives, a pro-Israeli group that holds Pearl Street Mall, Colorado in solidarity with Israeli hostages in #Gaza #CVE .@ravikarkara pic.twitter.com/mCUjZxHFV3
— Parthiban Shanmugam (@hollywoodcurry) June 2, 2025
இந்த கொடூரமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கொலராடோவின் போல்டரின் சிறந்த மக்களுக்கும் என் இதயம் இரங்குகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

