Courtesy: Sivaa Mayuri
சமூகவியலாளர் பேராசிரியர் சசங்க பெரேராவுக்கு எதிராக புதுடில்லியில் இயங்கும் தெற்காசிய பல்கலைக்கழகம் ஆரம்பித்துள்ள விசாரணையின் உண்மை தன்மை தமக்கு தெரிந்திருக்கவில்லை என்று இலங்கையின் உயர்ஸ்தானிகர் சேனுகா செனவிரட்ன (Kshenuka Senewiratne) தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அமெரிக்க மொழியியலாளர் நோம் சோம்ஸ்கியின் (Noam Chomsky) படைப்பு ஒன்றில், காஸ்மீர் விடயத்தில் ஆளும் நரேந்திர மோடியின் அரசாங்கத்தை விமர்சிக்கும் விடயங்கள் அடங்கியிருந்தன.
ஒழுக்காற்று விசாரணை
எனினும் அதனை இலங்கையை சேர்ந்த பேராசிரியர் சசங்க பெரேரா மேற்பார்வையிட்டு ஒப்புதல் வழங்கியிருந்தார்.
இதனையடுத்தே அவர் மீது தெற்காசிய பல்கலைக்கழகம் ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்தது.
இதன் காரணமாக பேராசிரியர் சசங்க பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறினார்.
இதற்கிடையில், குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கையின் உயர்ஸ்தானிகர் சேனுகா செனவிரட்ன, தெற்காசிய பல்கலைக்கழகத்தின் தலைவர் அகர்வாலிடம் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
வாய்மொழித் தொடர்பாடல்
எனினும் தற்போது தமது நிலைப்பாட்டில் இருந்து விலகியுள்ள அவர் குறித்த விடயம், இந்தியாவின் ஆளும் கட்சியுடன் தொடர்புடையது என்று தமக்கு தெரியாது என்றும், அது உரிய வகையில் தமக்கு கூறப்பட்டிருந்தால், இராஜதந்திர ரீதியில் இந்த விடயத்தில் தலையிடாமல் இருந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் பெரேரா தமக்கு முன்வைத்த எழுத்து மற்றும் வாய்மொழித் தொடர்பாடல்களில், அமெரிக்க மொழியியலாளர் இந்திய பிரதமரை விமர்சித்தது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அதேநேரம் தாம் அவருக்காக பிரதிநிதித்துவத்தை வழங்கியபோது இது குறித்து பல்கலைக்கழகமும் தமக்கு உரிய தகவல்களை தெரிவிக்கவில்லை என்று சேனுகா குறிப்பிட்டுள்ளார்.