கட்டுநாயக்க விமான நிலையத்தில் 21 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் விமான நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் மேலதிக விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 21 வயதுடைய பெண் சந்தேகநபரும், 30 வயதுடைய ஆண் சந்தேகநபரும் உள்ளடங்கவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

