பாகிஸ்தான் (Pakistan) கிரிக்கெட் வீரர் ஹைதர் அலிக்கு (Haider Ali) எதிராக குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஷாஹீன்ஸ் உள்ளூர் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது
நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கிரேட்டர் மென்செஸ்டர் காவல்துறையினர் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், சம்பவத்தின் தன்மை குறித்து தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கிரிக்கெட் சபை
இதனையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவரை தற்காலிகமாக போட்டிகளில்
இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
அத்தோடு, ஹைதர் அலிக்கு சட்டப்பூர்வ ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்றும்
இங்கிலாந்து சட்ட நடவடிக்கைகளுக்கு மதிப்பளிப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட்
சபை தெரிவித்துள்ளது.
இடைநீக்கம்
இந்த இடைநீக்கம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், விசாரணையின் முடிவு வரை அவர்
இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பார் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை
தெரித்துள்ளது.
சட்ட செயல்முறை முடிந்ததும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதன் நடத்தை விதிகளின்
கீழ் மேலும் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, இந்த நேரத்தில் மேலும் எந்த கருத்தையும் தெரிவிக்கமுடியாது என்றும்
பாகிஸ்தான் கிரிக்கட் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.