இலங்கை பிரஜைகளுக்கான இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவது தொடர்பில் இந்திய நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள உடன்படிக்கையை மக்கள் போராட்ட முன்னணி விமர்சித்துள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத்திற்கு மக்கள் போராட்ட முன்னணி இன்று(06.01.2025) அனுப்பிய கடிதத்திலேயே இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை, இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு இந்திய நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
மீளாய்வு நடவடிக்கை
அத்துடன், ஒப்பந்தத்தின் இறுதிக்கட்டமான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த மாதளமளவில் கைச்சாத்திடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தம் இலங்கை மக்களின் ஜனநாயக உரிமை, நாட்டின் பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு, நாட்டின் பொருளாதாரம் மற்றும் நாடு மற்றும் நாடு மக்களின் இறையாண்மை ஆகியவற்றை பாதிக்கும் என மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு முன்னர் அது தொடர்பில் முக்கிய மீளாய்வு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் முன்னணியால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பத்தின் அனுகூலங்கள்
தகவல்களை நம்பியிருக்கும் சகாப்தத்தில் நாம் தற்போது இருப்பதால், நாடு மக்களின் விபரங்களை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவது ஆபத்தானது எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் தந்திரோபாய நடவடிக்கை என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணி, இலங்கை மக்களின் பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை நிராகரிப்பதற்கான முன்மொழிவு நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அதேவேளை, புதிய தொழில்நுட்பத்தின் அனுகூலங்கள் நாட்டு மக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும் எனவும் மக்கள் போராட்ட முன்னணியினர் கடிதத்தின் மூலம் விளக்கியுள்ளனர்.