ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 43ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி (MS Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் (Pat Cummins) தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) பலப்பரீட்சை நடத்தியது.
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து 155 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.