Courtesy: Sivaa Mayuri
இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 2,000 இணைய அச்சுறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.
குழுவின் பொறியியலாளர் சாருகா தமுனுபொல இதனை தெரிவித்துள்ளார்.
இணையக் குற்றச் செயல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அண்மையில் மாதங்களில் மாத்திரம் 9,500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இணைய மோசடிகள்
இவற்றில் 981 வழக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தப்பட்டவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இணைய அச்சுறுத்தல்களை தவிர, இணைய மோசடிகள் சம்பந்தமாக கிட்டத்தட்ட 1,600 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.