2025 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சிறிலங்கா கிரிக்கெட் இன்று (01.08.2025) அறிவித்துள்ளது.
லங்கா பிரீமியர் லீக்
அதன்படி நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என்று சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு போட்டிகள் கொழும்பு, பல்லேகலை மற்றும் தம்புள்ளை மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரவிருக்கும் 2026 டி20 உலகக் கிண்ண ஒத்திகையாக இந்தக் காலகட்டத்தில் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

