டெல்லி கேப்பிட்டல்ஸ்(DC) அணியின் தலைவர் ரிஷப் பண்ட்(Rishabh Pant )சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் இன்னும் 5 மாதங்களில் நடக்கவுள்ளது.இதற்கமைய, ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் உரிமையாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங்கை(Ricky Ponting) அந்த பதவியிலிருந்து விலகியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு , 2018-ல் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரிக்கி பாண்டிங், கிட்டத்தட்ட 7 சீசன்களாக டெல்லி அணியை வழிநடத்தியும் ஒரு சாம்பியன் பட்டத்தைக் கூட அணி பெறவில்லை என்பதால் இந்த தீர்தானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின்தலைவர் செயல்பட்டு வரும் ரிஷப் பண்டும் தற்போது அணியை விட்டு வெளியேற இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
எனினும், இதுதொடர்பாக அணி நிர்வாகமோ அல்லது ரிஷப் பண்ட்டோ இதுவரை அதிகாரபூர்வாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் அணித்தலைவர் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்ற கேள்வியுள்ள நிலையில் அந்த அணியில் விக்கெட் காப்பாளர் தேவையும் உள்ளது.
எனவே ரிஷப் பண்ட்டும் ஒரு விக்கெட் காப்பாளர் என்பதால் சிஎஸ்கே இரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.