ஐ பி எல் 2025 (IPL) தொடரில் முதல் முறையாக சூப்பர் ஓவர் வரை சென்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் (Delhi Capitals) அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
தொடரின் 32 ஆவது போட்டி டெல்லி கெப்பிட்டல்ஸ் (DC) – ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணிகள் இடையே டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில், நாணய சுழற்சியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தலைவர் சஞ்சு சம்சன் வென்று பந்து வீச்சை தெரிவு செய்துள்ளார்.
சுப்பர் ஓவர் (Super Over)
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை பெற்று ராஜஸ்தான் அணிக்கு 189 வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை பெற்றதால் போட்டி சமநிலையில் முடிந்தது.
இதையடுத்து நடைபெற்ற சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 06 பந்துகளுக்கு 02 விக்கெட்டை இழந்து 11 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 13 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.