முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமது தொழில்முறை தகுதிகளை பகிரங்கப்படுத்திய நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர்

Courtesy: Sivaa Mayuri

நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர்  மொஹமட் ரிஸ்வி சாலிஹ், தலைமைத்துவத்தில் நம்பிக்கை மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தனது தொழில்முறை தகுதிகள் பற்றிய விபரங்களைப் பகிர்ந்துள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் அவர், சான்றிதழ்கள் மூலம், தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவக் கல்லூரியில் 1986இல் பெற்ற MBBS பட்டம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் லாரிங்கோ ஓட்டோரினோலஜி டிப்ளோமா (DLO) உட்பட தனது தகுதிகளை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

அரச சேவை

அவர் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட வைத்திய நிபுணர் என்பதுடன் 38 வருடங்களாக மருத்துவப் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். சாலிஹ்கின் வாழ்க்கை அரச சேவையில் தொடங்கி, இலங்கையின் மாகாணங்கள் மற்றும் கொழும்பில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார்.

தமது தொழில்முறை தகுதிகளை பகிரங்கப்படுத்திய நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் | Deputy Speaker Of Parliament S Qualifications

12 வருட பொது சேவைக்குப் பிறகு, சமூகத்திற்கு பரந்த அளவில் தொடர்ந்து சேவை செய்ய பொது மருத்துவப் பயிற்சிக்கு தம்மை மாற்றிக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவலைப் பகிர்வதன் மூலம், பிரதி சபாநாயகராக தனது பங்கில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலைப் பேணுவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதே தமது நோக்கம் என சாலிஹ் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகுதி தொடர்பான முறைபாடுகள் காரணமாக பதவி விலகியதை தொடர்ந்து, தமது தகுதிகளை பகிரங்கமாக வெளியிட  முடிவு செய்ததாக, நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஸ்வி சாலிஹ் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.