முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசபந்துவிடம் பல தரப்பிலும் விசாரணை: பதவி நீக்க நாடாளுமன்றில் குற்றப்பிரேரணை..!

பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின்
சொத்துக்கள் குறித்து கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணையகம்
விசாரணையை ஆரம்பித்துள்ளது.

தென்னகோனின் ஹோகந்தர இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஏராளமான
வெளிநாட்டு மதுபானங்கள், பரிசுப் பொருட்கள் நிரப்பப்பட்ட பொதிகள் மற்றும்
பல்வேறு உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர், சொத்துக்களை வாங்குவதில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்
கீழ் ஏதேனும் குற்றங்களைச் செய்தாரா என்பதை ஆராய குற்றப் புலனாய்வுத் துறையும்
விசாரணையை ஆரம்பித்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் பதவி

தென்னகோனின் பல சொத்துக்கள் அவரது பெயரில் பதிவு செய்யப்படவில்லை என்று
கூறப்படுகிறது. எனவே அவர் மற்றவர்களை மறைமுகமாகப் பயன்படுத்தி சொத்துக்களைப்
பெற்றாரா என்பது குறித்து விசாரணை கவனம் செலுத்தப்படுகிறது.

தேசபந்துவிடம் பல தரப்பிலும் விசாரணை: பதவி நீக்க நாடாளுமன்றில் குற்றப்பிரேரணை..! | Deshabandu Tennakoon On Inquiry Under All Crimes

இதற்கிடையில், அரகலய என்ற காலிமுகத்திடல் போராட்டக் காலத்தில் கடமை
தவறியதற்காக, தென்னகோனுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க
திட்டமிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு வெலிகம துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு
குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், கூடுதல்
சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளின் அடிப்படையில்,
தென்னக்கோன் மீதான கையூட்டல் ஒழிப்பு ஆணையகத்தின் விசாரணை
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசபந்துவிடம் பல தரப்பிலும் விசாரணை: பதவி நீக்க நாடாளுமன்றில் குற்றப்பிரேரணை..! | Deshabandu Tennakoon On Inquiry Under All Crimes

தேசபந்து தென்னக்கோன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் உயர் நீதிமன்றத்தால் தனது
கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்,
எனவே அவர் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் பொலிஸ் மா அதிபராக உள்ளார்,
இதனையடுத்தே மூத்த பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ் மா
அதிபராக பணியாற்றுகிறார்.

இதேவேளை பொலிஸ் மா அதிபரை பணிநீக்கம் செய்யும் அதிகாரம் தேசிய பொலிஸ்
ஆணையகத்துக்கும் இல்லை. ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில், பொலிஸ் மா அதிபர்
அரசியலமைப்பு பேரவையால் நியமிக்கப்படுவதால், அவருக்கு எதிராக ஒழுக்காற்று
நடவடிக்கை எடுப்பது ஜனாதிபதி மற்றும் பேரவையின் பொறுப்பாகும்.
அத்துடன் பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கு, நாடாளுமன்றத்தில் ஒரு குற்றவியல்
பிரேரணையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.