கடந்த (8)ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் ( 03.02.2025) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 10 கடற்றொழிலாளர்களது வழக்கு இன்று (23) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விளக்கமறியல் நீடிப்பு
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளால் கடற்றொழிலாளர்கள் நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்டு நீதிவான் முன்னிலையில்
முற்படுத்தப்பட்டடனர்.
இதனையடுத்து, நீதவான் நளினி சுபாஸ்கரன் இவர்களது விளக்கமறியலை (03-02.2025) வரை
நீடித்து உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களிடமிருந்து ஒரு படகு கடற்படையால் கைப்பற்றப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.