சுமார் 12.9 நூறு கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கேலக்ஸி ஒன்றின் மையத்தில் 710 இலட்சம் நிறையைக் கொண்ட ஒரு இராட்சத கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கருந்துளையிலிருந்து வெளிப்படும் பிளேசர் என்று சொல்லப்படும் ரேடியேஷன் நமது பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இராட்சத கருந்துளை
பிக் பாங் எனும் பிரபஞ்சம் தோன்றிய பின்னர் VLASS J041009.05-013919.88 என்கிற (சுருக்கமாக J0410-0139 ) இந்த வினோதப் பெயர் கொண்ட கருந்துளை உருவாகியுள்ளது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ‘பிளேசர்’ வகை இராட்சத கருந்துளைகளில் இதுதான் ஆகத் தொன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.