முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆறு வருடங்களுக்கு முன் நடந்த கொலை கண்டுபிடிப்பு! வெளியான அதிர்ச்சிகர பின்னணி

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் நடந்துள்ள ஒரு கொலை சம்பவத்தை கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.

குறித்த கொலைச் சம்பவமானது, இந்துருவகல்ல, இந்துருவகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த மது விருந்தின் போது ஏற்பட்டிருப்பதுடன், அதன் அதிர்ச்சிகர பின்னணியும் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்போது, கொலை செய்யப்பட்டவர், அதே பகுதியில் வசிக்கும் 58 வயதுடைய சுனில் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

கொலை சம்பவம்

2019 செப்டம்பர் 18, அன்று, சம்பந்தப்பட்ட நபர் மூன்று பேருடன் மது விருந்தை ஒன்றை நடத்தியுள்ளார்.

ஆறு வருடங்களுக்கு முன் நடந்த கொலை கண்டுபிடிப்பு! வெளியான அதிர்ச்சிகர பின்னணி | Discovery Of A Murder That Occurred Six Years Ago

அப்போது, அவர் குடிபோதையில் பேசிய கடுமையான வார்த்தையால் ஆத்திரமடைந்த மற்றொரு குழு, அவரைத் தாக்கி கொலையைச் செய்துள்ளது.

கொலைக்குப் பிறகு, சந்தேக நபர்கள் அங்கிருந்த மலசலகூட குழிக்கு அருகில் ஒரு சிறிய துளையை தோண்டி அதன் வழியாக மலசலகூட குழிக்குள்ளேயே உடலை வீசியுள்ளனர்.

உயிரிழந்தவர் அந்த நேரத்தில் இரும்புத் திருட்டுக்காக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்ததால், காவல்துறையினருக்கு பயந்து அவர் கிராமத்தை விட்டு ஓடிவிட்டதாக சந்தேக நபர்கள் கிராமம் முழுவதும் ஒரு பொய்யான வதந்தியைப் பரப்பியுள்ளனர்.

சந்தேகநபர்களின் வாக்குமூலம்

எனினும், அவர் திடீர் என காணாமல் போனது தொடர்பாக காலியில் வசிக்கும் உறவினர்கள் காவல்துறையினரிடம் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து நீண்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஆறு வருடங்களுக்கு முன் நடந்த கொலை கண்டுபிடிப்பு! வெளியான அதிர்ச்சிகர பின்னணி | Discovery Of A Murder That Occurred Six Years Ago

அதன்படி, சந்தேகத்தின் பேரில் அன்றைய தினம் உயிரிழந்தவருடன் மது அருந்திய மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனைதொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுனிலைக் கொன்று சந்தேக நபர் ஒருவரின் தோட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலசலகூட குழிக்குள் வீசியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த உடல் நாளை கம்பஹா நீதவான் மற்றும் கம்பஹா வைத்தியசாலையின் நீதித்துறை மருத்துவ அதிகாரி முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட உள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.