குற்றம் செய்யாமல் குற்றம் சாட்டப்படுவதால் அண்மைக்காலங்களில் பணியாற்றுவதில் சலிப்புத்தன்மை ஏற்பட்டுள்ளதாக என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Jaffna) பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜபிசி தமிழ் ஊடகத்தின் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற போது நீங்கள் அது தொடர்பில் எந்த ஒரு கருத்தையும் முன் வைக்கவில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்கு தான் வாய் திறந்தாலே ஊழல் என்று சொல்வதாகவும் எதிர்வரும் நாட்களில் படிப்படியாக நிருபிப்பேன் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முள்ளிவாய்க்காலில் இறுதி நாட்களில் காயமடைந்தவர்களில் விடுதலைப்புலிகளின் மேல்நிலைப் போராளிகளை சந்தித்து கலந்துரையாடியதாகவும் தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்று முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இறுதி மூன்று நாட்கள் தனது வாழ்நாளில் மறக்க முடியாத வடு என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்த விரிவான கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்,
https://www.youtube.com/embed/NiQRpnu72zw