முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் மாணவிகளுடன் தவறாக நடக்க முயற்சி செய்த பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில்

மதுபோதையில் பாடசாலைக்குள் நுழைந்து மாணவிகளிடம் முறையற்ற விதத்தில் நடந்து
கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ள
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்
முல்லைத்தீவிலுள்ள பாடசாலைக்குள் மதுபோதையில் சிவில் உடையில்
புகுந்து மாணவிகளை மலசல கூடத்துக்கு வருமாறு அழைத்து தவறாக நடந்துக்கொள்ள  முற்பட்ட சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாடு

இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

முல்லைத்தீவில் மாணவிகளுடன் தவறாக நடக்க முயற்சி செய்த பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் | Drunk Cop Misbehaves With Girls Remanded

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த
பொலிஸ் உத்தியோகத்தர் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி என்பது தெரியவந்ததுள்ளது.

பணியில் இருக்கும்போது மதுபோதையில் இருந்ததற்காகவும், பாடசாலைக்குள் நுழைந்து
மாணவிகளிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதற்காகவும் மல்லாவி பொலிஸாரால்
அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவு

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என
தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவில் மாணவிகளுடன் தவறாக நடக்க முயற்சி செய்த பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் | Drunk Cop Misbehaves With Girls Remanded

சந்தேக நபர் இன்று (18) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மார்ச் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்