அடுத்த ஆண்டு முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை ஒகஸ்ட் மாதத்திலும் உயர்தரப் பரீட்சை டிசம்பர் மாதத்திலும் நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், 2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு பெப்ரவரியில் நடத்தப்படும்.

பாடசாலை விடுமுறை
இதற்கமைய, பாடசாலை விடுமுறை, உரிய காலப்பகுதியில் வழங்கப்பட வேண்டும் என அமைச்சு அறிவித்துள்ளது.

