யாழில் (Jaffna) கிணற்றில் தவறி விழுந்து வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளது.
அரியகுட்டி புவனேஸ்வரி (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக முயற்சித்தவேளை கால்
தவறி கிணற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டுள்ளார்.
சாட்சிகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் நெறிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

