முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பொதுப் பரீட்சை !

இலங்கையிலுள்ள (Sri Lanka) பல்கலைக்கழகங்களின் நுண்கலை மற்றும் குறிப்பிட்ட சில சிறப்பு
பட்டப்படிப்பு அனுமதிக்குத் தேவையான பொது உளச்சார்பு மற்றும் செயன்முறைப்
பரீட்சைகளுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட பரீட்சை முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (University Grants Commission) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை காலமும் அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் தனித்தனியாக மேற்கொண்டு வந்த
இந்தத் தெரிவுப் பரீட்சைகளை இனி பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations, Sri Lanka) நடத்தும் வாய்ப்பு
உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முக்கியமான கலந்துரையாடல் 

இந்த மாற்றம் குறித்த முக்கியமான
கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பொதுப் பரீட்சை ! | Exams Dept Announces Special Studies Test

இதுவரை, நுண்கலை, மொழிபெயர்ப்பு கற்கைகள், விளையாட்டு விஞ்ஞானம் மற்றும் உடற்கல்வி
போன்ற பாடப் பிரிவுகளுக்காக ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனித்தனியாக பொது
உளச்சார்பு மற்றும் செயன்முறைப் பரீட்சைகளை நடாத்தி வந்தன.

ஆனால்,
நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்களுக்கான குழுவின் (கோப்) பரிந்துரைகள் மற்றும்
முறைப்பாடுகளின் காரணமாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பொது முறைமையைப்
பின்பற்றத் திட்டமிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் 

இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எதிர்வரும் ஏப்ரல் முதலாம்
திகதியன்று ஆணைக்குழு அலுவலகத்தில் உயர் மட்ட
கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பொதுப் பரீட்சை ! | Exams Dept Announces Special Studies Test

இந்தக் கலந்துரையாடலில் பரீட்சைகள்
திணைக்கள ஆணையாளர் நாயகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள்,
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆகியோர் பங்கேற்று, பரீட்சைகள்
திணைக்களத்தின் கீழ் இந்தப் பரீட்சைகளை நடத்தும் வாய்ப்புகள் தொடர்பில்
ஆராயவுள்ளனர்.

இந்த மாற்றம், மாணவர் தெரிவில் வெளிப்படைத்தன்மை, ஒருமைப்படைவு மற்றும்
சமத்துவத்தை உறுதி செய்வதுடன் தற்போதைய முறையில் உள்ள குறைகளையும் சரி செய்ய
உதவும் என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

you may like this…!

https://www.youtube.com/embed/bcZUfFoBgS0

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.