இலங்கையின் நிர்மாணத்துறை கடந்த பெப்ரவரி மாதத்தில் தொடர்ந்தும் விரிவடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதற்கமைய, நிர்மாணத்துறைக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் குறித்த மாதத்தில் 55.6 ஆக மேலும் அதிகரித்துள்ளது.
நிர்மாண பணி
குறித்த மாத காலப்பகுதியில் நிர்மாண பணியில் தொடர்ச்சியான அதிகரிப்பு பதிவாகியுள்ள போதிலும், வளர்ச்சியினை நிலைநிறுத்துவதற்கு பாரியளவில் கருத்திட்டங்களுக்கான தேவை அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதத்தில் நிர்மாணத்துறைக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 52.9 ஆக பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

