முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய வானிலை ஆய்வு மையம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்.. வெளிக்கிளம்பும் புதிய சர்ச்சை

‘டித்வா’ சூறாவளி இலங்கைக்கு அண்மையிலுள்ள கடற்பரப்பில் உருவாகிய நாள் முதல் அதன் தாக்கம் தொடர்பில் இந்திய வானிலை ஆய்வு மையம் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக த இந்தியன் எஸ்பிரஸ் செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அத்தியட்சகர் தங்களுடன் இதனை பகிர்ந்து கொண்டதாக அந்த செய்தித் தளம் தெரிவித்துள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு மையம்

எச்சரிக்கை மற்றும் முன்னெடுப்பபுகள் என்ற தலைப்பில் கடந்த 13ஆம் திகதி இலங்கைக்கு அண்மையில் தாழழுக்க நிலை ஒன்று உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முதன்முதலில் கணித்திருந்தது, மேலும் நவம்பர் 20 ஆம் திகதி புயல்(cyclogenesis) சாத்தியம் குறித்து எச்சரிக்கையை வெளியிட்டது.

அதாவது சூறாவளியாக மாறி காற்றின் வேகம் அதிகரிப்பு மற்றும் அதிக மழைவீழ்ச்சி ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்.. வெளிக்கிளம்பும் புதிய சர்ச்சை | Explained Sci Tech Cyclone Ditwah Sri Lanka  

பகிர்ந்து கொண்ட தகவல்கள்

மேலும் நவம்பர் 23 முதல், இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த அமைப்பின் தன்மை குறித்து மூன்று மணி நேரத்திற்கும் ஆறு மணி நேரத்திற்கும் ஒரு முறை வானிலை அறிக்கைகளை வெளியிட்டுள்ளது, இந்த சைக்ளோஜெனீசிஸ் நவம்பர் 26 ஆம் திகதி அதன் பாரிய தாக்கத்தை உருவாக்கும் எனவும் கணிப்பிட்டுள்ளது.

அனைத்து தகவல்களும் வழக்கமான முறையில் இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள முன்னறிவிப்பு

இருப்பினும், இலங்கையில் இலட்சக்கணக்கான மக்களை குறுகிய அறிவிப்பில் மாற்றக்கூடிய விரிவான வெளியேற்ற வழிமுறை இல்லை. சூறாவளியின் இயக்கம் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மற்றும் முன்கூட்டியே தகவல் இருந்தபோதிலும், அது வரையறுக்கப்பட்ட வெளியேற்றத்தை மட்டுமே செய்ய முடியும் எனவும் அந்த செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இது தொடர்பில் இலங்கை வளிமன்டலவியல் எவ்வித அறிவித்தலும் விடுக்கவில்லை. இவ்வாறாக வெளிவரும் பல தகவல்கள் இந்த விவகாரம் குறித்து மேலும் பல சர்ச்சைகளை தோற்றுவிக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.