வடமத்திய மாகாண (North Central Province) ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டிருந்த 14 போலிப் பட்டதாரிகள் தற்போதைக்கு கண்டறியப்பட்டு, சேவையில் இருந்து இடைநிறுத்தப்படவுள்ளனர்
கடந்த காலங்களில் போலி பட்டதாரி சான்றிதழ்கள் மற்றும் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து, வடமத்திய மாகாண ஆசிரியர் சேவையில் நியமனம் பெற்றுக் கொண்டவர்களே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளனர்.
14 பேரின் ஆசிரியர் நியமனங்கள்
இவர்கள் அனைவரும் பட்டதாரி பயிலுனர் ஆசிரியர்களாக தற்போதைக்கு சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த 14 பேரின் ஆசிரியர் நியமனங்களை இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிரிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.