காதலர் தினமான இன்று பாடசாலை மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படாது என்று பரவும் செய்தி தவறானது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தி, கல்வி அமைச்சின் செயலாளரின் கையொப்பம் எனக் கூறி, போலியான கையொப்பத்துடன், அமைச்சின் கடிதத் தலைப்பின் கீழ் வெளியிடப்படுவதாக தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
காதலர் தினத்தன்று சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருவதால், அதற்கு பொறுப்பான அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலை மற்றும் கல்வி வகுப்புகளையும் இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்தப் போலி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலி செய்தி
எனினும் அந்த தகவல் அல்லது செய்திகளை பரப்புவதனை தவிர்க்குமாறு அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.