Courtesy: Sivaa Mayuri
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayaka) ஆதரவளிப்பதாக சமூக ஊடகங்களில் அண்மையில் பரப்பப்பட்ட காணொளி போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இலங்கை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்று விளிக்கும் இந்த காணொளியில், 2024 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் அநுரவுக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்.
குரல் பதிவு
அநுரகுமாரவால் மட்டுமே இலங்கையை மீட்க முடியும், அவர் மனிதநேயம் கொண்ட ஒரு சிறந்த நேர்மையான மனிதர். நான் ஒரு அநுர ரசிகன். நீங்கள் அவருக்கு வாக்களிப்பது நல்லது” என்ற குரல் பதிவிடப்பட்டிருந்தது.
எனினும், ட்ரம்பின் இந்த காணொளி, சர்வதேச செய்தி இணையதளத்தில் வெளியான ஒன்று என்பதும், அதில் போலியாக டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய குரல் சேர்க்கப்பட்டுள்ளதும், சரிபார்த்தலின் போது, கண்டறியப்பட்டுள்ளது.