புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய
தந்தை, மகன் என இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் புதுக்குடியிருப்பு விசுவமடு 10ஆம் கட்டை பகுதியில் உறவினர்களால்
வீட்டுத் தளபாடங்கள், மோட்டார் சைக்கிள் என்பன களவாடப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணை
குறித்த
திருட்டு சம்பவம் தாெடர்பாக வீட்டு உரிமையாளர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ்
நிலையத்தில் போடப்பட்ட முறைப்பாட்டுக்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி தலைமையில் குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்
திருடிய பொருட்களுடன் நேற்றையதினம் (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய புன்னை நீராவி
விசுவமடுவில் வசிக்கும் தந்தை (72வயது), மகன் (24வயது) கைது செய்யப்பட்டதுடன்
, திருடப்பட்ட பாெருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதவான்
நீதிமன்றில் களவெடுத்த பொருட்களுடன் முற்படுத்தப்பட உள்ளனர்.
இது
தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.