கொழும்பில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட மோதல் காரணமாக பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதியில் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக, நடனக் கலைஞர் மற்றும் அழகுக்கலை நிபுணர் உட்பட 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு, புதுக்கடை பகுதியை சேர்ந்த தாக்குதலுக்கு உள்ளான நபர், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பொலிஸாரின் தகவலுக்கமைய, கைது செய்யப்பட்ட 7 பேரில் தொழிலதிபர் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரி ஆகியோர் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
இரு தரப்பினருக்கு இடையில் வாக்குவாதம்
இரு தரப்பினருக்கு இடையில் வாக்குவாதம் வன்முறையாக மாறியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 2 பெண்கள் பலாங்கொட மற்றும் மெதிரிகிரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் மீதமுள்ளவர்கள் கொழும்பில் வசிப்பவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மோதல் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

