அரச சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரச துறையில் உள்ள அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப 30,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, 2025 ஆம் ஆண்டில்10,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
https://www.youtube.com/embed/YmEgnXnfMuY