முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

EFL தொடரில் கோல் அடித்த முதல் தமிழ் கால்பந்து வீரர்!

ஆங்கில கால்பந்து தொடரில் (EFL) கோல் அடித்த முதல் இலங்கை தமிழ் வம்சாவளி வீரர் என்ற பெருமையை விமல் யோகநாதன் பெற்றுள்ளார்.

பார்ன்ஸ்லி எஃப்சியின்(Barnsley FC) மிட்ஃபீல்டரான விமல் யோகநாதன், டான்காஸ்டர் ரோவர்ஸில்(Doncaster Rovers F.C) அணிக்கொதிரான போட்டியில் குறித்த சாதனையை பதிவு செய்துள்ளார்.

ஆங்கில கால்பந்து தொடரரில் மூன்றாவது அடுக்கு என அடையாளமிடப்படும், லீக் ஒன்(League One) தொடரில் 19 வயது இளம் வீரரின் இந்த சாதனை பாரட்டுக்களை பெற்று வருகிறது.

கால்பந்து பயணம்

பிரித்தானியாவின் தொழில்முறை உதைப்பந்தாட்ட கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் தமிழர் என்ற சாதனையையும் அவர் தனதாக்கியுள்ளார்.

EFL தொடரில் கோல் அடித்த முதல் தமிழ் கால்பந்து வீரர்! | First Tamil Player To Achieve Feat In Efl

ஜனவரி 13, 2006 அன்று வேல்ஸில் உள்ள ஒரு சிறிய ஃபிளின்ட்ஷயர் கிராமமான ட்ரெலாவ்னிட்டில் பிறந்த யோகநாதனின் கால்பந்து பயணம் நான்கு வயதில் ஹோலிவெல் லீஷர் சென்டரில் உள்ளரங்க கால்பந்து விளையாடத் தொடங்கியபோது தொடங்கியுள்ளது.

இலங்கைத் தமிழ் பாரம்பரியத்தைச் சேர்ந்த அவரது பெற்றோர், ஆரம்பத்திலிருந்தே அவரது ஆர்வத்தை ஆதரித்ததுள்ளனர்.

2012: 6 வயதில் லிவர்பூல் எஃப்சியால் ஸ்கவுட் செய்யப்பட்டது.

2014: 8 வயதில் அதிகாரப்பூர்வமாக லிவர்பூல் அகாடமியில் இணைந்துள்ளார்.

2022: பார்ன்ஸ்லி கழகத்தில் சேர்ந்து முதல் தொழில்முறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஒகஸ்ட் 2023: EFL கோப்பையில் தொழில்முறை அறிமுகமானார், தொழில்முறை ஆங்கில கால்பந்தில் முதல் தமிழ் வீரர் ஆனார்.

EFL தொடரின் முதல் கோல்

நவம்பர் 8, 2025: டான்காஸ்டர் ரோவர்ஸில் பார்ன்ஸ்லியின் 2 க்கு 1 வெற்றியில் ஒரு தமிழ் வீரருக்காக வரலாற்று சிறப்புமிக்க முதல் EFL தொடரில் கோலை அடித்தார்.

EFL தொடரில் கோல் அடித்த முதல் தமிழ் கால்பந்து வீரர்! | First Tamil Player To Achieve Feat In Efl

விமல் யோகநாதனின் சாதனை கால்பந்து மைதானத்திற்கு அப்பாற்பட்டது.

தெற்காசிய பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ள ஒரு விளையாட்டில், தடைகளை உடைத்து வரலாற்றை உருவாக்க முடியும் என்பதை அவர் தனதாக்கியுள்ளார்.

தமிழ் பின்னணியைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரர்கள் இப்போது தொழில்முறை வெற்றியை அடையக்கூடியது என்பதை நிரூபிக்கும் ஒரு முன்மாதிரியைப் பெற்றுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.