அமைதியாக கொண்டு செல்லப்பட்ட விவாதத்தை சிவபூஜையில் கரடி புகுந்தது போல் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா (Ramanathan Archchuna) குழப்புவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நாடளுமன்றத்தின் இன்றைய(05) அமர்வில் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) பேசும் போது அர்ச்சுனா ஒழுங்கு பிரச்சினையை எழுப்ப விரும்பினார்.
அர்ச்சுனா தொடர்ந்தும் சந்திரசேகரை இடைமறித்த போது, அவருக்கு ஒழுங்கு பிரச்சினையை எழுப்ப 30 வினாடிகள் வழங்கப்பட்டது.
நாடாளுமன்றில் குழப்பம்
இதன்போது உரையாற்றிய அர்ச்சுனா, சபாநாயகர் தன்னை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு கடிதம் அனுப்பியிருந்ததாக கூறினார்.
இதன்பின்னர் மீண்டும் உரையாற்றிய சந்திரசேகர், அர்ச்சுனா அமைதியாக சென்ற நாடாளுமன்றத்தை சிவபூஜையில் கரடி புகுந்தது போல குழப்புவதாக குறிப்பிட்டார்.
மேலும், கயிறு ஒன்றைக் கொண்டு அர்ச்சுனாவை கட்டிபோடுங்கள் எனவும் அமைச்சர் கூறினார்.