வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (13) காலை காலி (Galle), ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
மிஹிரிபென்ன பிரதேசத்தில் உள்ள கடற்றொழில் துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது.
காலி, மிஹிரிபென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய கடற்றொழிலாளரே உயிரிழந்துள்ளார்
என்று ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
முன்விரோதம் காரணமாக கடற்றொழில் துறைமுகத்துக்குச் சென்ற இனம் தெரியாத மூவரால்
இந்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.