முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சட்டவிரோதமான முறையில் மலைப்பாம்பை கடத்திய ஐவர் கைது

 சட்டவிரோதமான முறையில் பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை கடல் மார்க்கமாக கடத்திச் செல்ல முயன்ற கடத்தல் கும்பலை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை கடந்த ஞாயிற்றுகிழமை(07) இடம்பெற்றுள்ளது.

தெற்கு கடலில் வழக்கமான ரோந்து பணியின் போது, கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த இழுவை கடற்றொழில் படகினை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

கைது நடவடிக்கை

இதன்போது, கூண்டுகளில் அடைக்கப்பட்ட அரியவகை பாம்பு இனங்கள் உட்பட பல்வேறு வெளிநாட்டு பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் மலைப்பாம்பை கடத்திய ஐவர் கைது | Five Arrested For Illegal Python Smuggling

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் 34 முதல் 67 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சட்டவிரோதமாக இழுவை கடற்றொழில் படகில் கொண்டு வரப்பட்ட விலங்குகளை பரிசோதித்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், குறித்த விலங்குகள் இலங்கைக்கு சொந்தமனவை அல்ல என உறுதிப்படுத்தியுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் மலைப்பாம்பை கடத்திய ஐவர் கைது | Five Arrested For Illegal Python Smuggling

இந்த நிலையில், குறித்த விலங்குகள் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு கொண்டு வருவதற்காக அல்லது இலங்கை ஊடாக வேறு ஒரு நாட்டிற்கு அனுப்புவதற்காக இவ்வாறு கடத்தப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும்,கடற்றொழில் படகு மற்றும் பறவைகள் , ஊர்வன என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹிக்கடுவை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்