யாழ்ப்பாணத்தில்(Jaffna) சட்டவிரோதமாக மாடு கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் ஐவர்
நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதிப்பத்திரம் இன்றி ஏழு மாடுகளை வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்றபோது
காரைநகர் பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை
ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரனவின் கீழ் இயங்கும்
பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர்
அவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


