தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கு நிகரான பதவி
“ பீல்ட்மார்ஷல் பதவியென்பது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கு நிகரானதாகும். எனவே, அமைச்சுகளின் செயலாளர் பதவி எனக்கு பொருந்தாது. வழங்குவதாக இருந்தால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சே வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு வழங்கப்படும் பட்சத்தில் ஒரு வருடகாலப்பகுதிக்குள் பாதாள குழுக்களை கட்டுப்படுத்தலாம். இதன் அர்த்தம் அவர்களை கொலை செய்வது என்பது அல்ல. அவர்களுக்கு புனர்வாழ்வளித்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
பாதாள குழுக்களுடன் தொடர்புபட்டதே போதைப்பொருள் விவகாரம்
பாதாள குழுக்களுடன் தொடர்புபட்டதே போதைப்பொருள் விவகாரம். எனவே, அதற்கும் ஒன்றரை வருடகாலப்பகுதிக்குள் முடிவு கட்டலாம்.
நாட்டுக்காக பொறுப்பொன்றை வகிக்க வேண்டிய கட்டாய தேவை எழும்பட்சத்தில் அதனை ஏற்பதற்கு நான் பின்நிற்கமாட்டேன். “ -என்றார்.